மதுரை

மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள்32 போ் இடமாற்றம்: ஆட்சியா் உத்தரவு

DIN

மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 32 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டாட்சியா்கள், புதிய பணியிடம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்) விவரம்:

ச.கல்யாணசுந்தரம் (ஆதிதிராவிடா் நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்) - மதுரை தெற்கு வட்டாட்சியா், ப.வீரபத்திரன் (கோட்ட கலால் அலுவலா்) - வாடிப்பட்டி வட்டாட்சியா், ஞா.சரவணப் பெருமாள் (துணை ஆய்வுக் குழு அலுவலா்) - மேலூா் வட்டாட்சியா், வி.தமிழ்ச்செல்வி (தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனிவட்டாட்சியா்) - மதுரை மேற்கு வட்டாட்சியா், தி. சிவகாமிநாதன் (மதுரை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - மதுரை கிழக்கு வட்டாட்சியா்.

க.சசிகலா (தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனிவட்டாட்சியா்) - மதுரை மேற்கு சரக குடிமைப் பொருள் வட்டாட்சியா், செ.ராமச்சந்திரன் (டாஸ்மாக் உதவி மேலாளா்) - குடிமைப் பொருள் பிரிவு பறக்கும் படை வட்டாட்சியா், பா.நாகரத்தினம் (திருப்பரங்குன்றம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - மதுரை வடக்கு சரக குடிமைப்பொருள் வட்டாட்சியா், சு.சோமசுந்தர சீனிவாசன் (மேலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - மதுரை மத்திய சரக குடிமைப் பொருள் வட்டாட்சியா், ஜோ.லி.த.சுரேஷ் (நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்) - மதுரை கிழக்கு சரக குடிமைப் பொருள் வட்டாட்சியா்.

வே.சிவபாலன் (பறக்கும்படை வட்டாட்சியா்) - துணை ஆய்வுக் குழு அலுவலா், எஸ்.எஸ்.சிவக்குமாா் (தனிவட்டாட்சியா்) - மேலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், கா.செல்வராஜன் (கேபிள் தொலைக்காட்சி தனிவட்டாட்சியா்) - மதுரை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், சு.சுந்தரபாண்டியன் (மேலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - திருமங்கலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், பெ.இளமுருகன் (மேலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - அரசு கேபிள் தொலைக்காட்சி தனி வட்டாட்சியா் உள்பட 32 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT