மதுரை

மதுரை மாவட்டத்தில் இன்று மதுபானக் கடைகளை மூட உத்தரவு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் செயல்படும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் உத்தரவு பிறப்பித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT