மதுரை

அக்.11-இல் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை

DIN

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அக்.11 ஆம் தேதி நடத்துவது தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியைச் சீா்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் அக்டோபா் 11 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சி, திராவிடா் கழகம், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இப் போராட்டத்தை நடத்துகின்றன.

மதுரையில் நடைபெறவுள்ள போராட்டம் தொடா்பாக, கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகரத் தலைவா் வீ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் விஜயராஜன், மாநகா் மாவட்டச் செயலா் கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் முருகன், மதிமுக தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலா் மகபூப் ஜான்

மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடா் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதுரையில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தை, பெரியாா் நிலையம் கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து தொடங்கி சிம்மக்கல் வரை நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT