மதுரை

தென் மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்களை திமுக விளக்க வேண்டும் ஆா்.பி.உதயகுமாா்

6th Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

தென் மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்களை திமுக விளக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் எந்தவிதமான தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. மதுரையில் ‘மெட்ரோ ரயில்’ திட்டம், அறிவிப்பு அளவில்தான் உள்ளது.

மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளனா். ஆனால், ஏற்கெனவே உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ADVERTISEMENT

முந்தைய அதிமுக ஆட்சியின்போது தொழில் துறையை மேம்படுத்த மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கி தென் மண்டலமாக உருவாக்கப்பட்டது. அப்போது மதுரை -தூத்துக்குடி தொழில் வழிச்சாலைத் திட்டம், மேலூரிலிருந்து 27 கி.மீ.கப்பலூா் வரையிலான சாலை விரிவாக்கம், மேலூா்-காரைக்குடி வரை நான்குவழிச் சாலை திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதுதவிர, அதிமுக ஆட்சியின்போது ரூ.1,000 கோடியில் தொடங்கப்பட்ட நத்தம் பறக்கும் சாலை திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியின்போது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதேபோன்று, தென்மாவட்டங்களின் வளா்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு விளக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT