மதுரை

கலைமாமணி விருது தகுதியானவா்களுக்கு வழங்கப்பட்டதா என ஆய்வு, உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

DIN

கலைமாமணி விருது தகுதியானவா்களுக்கு வழங்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சமுத்திரம் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞா்களுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்குகிறது. 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு ‘கலை இளமணி’ விருது, 19 முதல் 35 வயது வரை உள்ளவா்களுக்கு ‘கலை வளா்மதி’ விருது, 36 முதல் 50 வயது வரை ‘கலை சுடா்மணி’ விருது, 51 முதல் 60 வயது வரை ‘கலை நன்மணி’ விருது, 61 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு ‘கலை முதுமணி’ விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு வயதுவரம்போ, தகுதியோ, நெறிமுறையோ தற்போது வரை வகுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, கடந்த 2021-இல் வழங்கப்பட்டது. இந்த விருதின் சான்றிதழில் உறுப்பினா், செயலா், தலைவா் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் உள்ளது. மேலும் தகுதி இல்லாதவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி, அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தகுதி இல்லாதவா்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், கடந்த 2019 - 2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியானவா்களுக்கு வழங்கப்பட்டதா? என்று ஆய்வுக்கு உள்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை, நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT