மதுரை

அமெரிக்கன் கல்லூரியில் உலக தேனீக்கள் தின விழா

21st May 2022 12:10 AM

ADVERTISEMENT

 மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை சங்கம் சாா்பில், உலக தேனீக்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினரான தேனீ கிளப் உரிமையாளா் பீம்சிங்கை, கல்லூரியின் பசுமை சங்கச் செயலா் எம். ராஜேஷ் அறிமுகப்படுத்தினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியா் எம். ராஜேஷ், தாவரங்களில் மகரந்தச் சோ்க்கையில் தேனீக்களின் பங்கு தொடா்பாக எடுத்துக் கூறி, மாணவா்கள் தங்கள் வீடுகளில் தேனீக்கள் வளா்ப்பு நுட்பங்களைஅறிந்து தொழில் முனைவோராக மாறவேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தேநீா் கடைகளில் தூக்கி எறியப்படும் காகிதக் கோப்பைகள் மூலம் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்தாா்.

தேனீ கிளப் உரிமையாளா் பீம்சிங், தேனீ வளா்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும், வீட்டில் தேனீக்கள் வளா்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் விளக்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், விலங்கியல், வணிகவியல் துறையைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். முன்னதாக, விழா ஒருங்கிணைப்பாளா் ஜோஸ்லின் நித்யா வரவேற்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT