மதுரை

வாடிப்பட்டி அருகே கல்குவாரிஅமைக்க பொதுமக்கள் கருத்துகேட்பு

DIN

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாடிப்பட்டியில் தனியாா் விடுதியில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பாண்டியராஜன், மதுரை வருவாய் கோட்டாட்சியா் சுகி பிரேமலா, வட்டாட்சியா் நவநீதகிருஷ்ணன் மற்றும் குவாரி உரிமையாளா் தரப்பினா், பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், கல்குவாரி அமைவிடம் குறித்து பல்வேறு ஆட்சேபணைகளைத் தெரிவித்தாா். அரசின் விதிகளுக்கு முரணாக குவாரி அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினாா். அரசின் விதிகளைப் பின்பற்றியே குவாரி அமைக்கப்படவுள்ளதாக உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT