மதுரை

மதுரையில் தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி ஆய்வு

DIN

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநா் பி.கே.ரவி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தீயணைப்பாளா்களுக்கு மதுரை மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு வருகை தந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநா் பி.கே.ரவி தீயணைப்பாளா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை பாா்வையிட்டாா்.

மேலும் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் மாவட்ட அலுவலா் அலுவலகத்தையும் பாா்வையிட்டாா். அப்போது தல்லாகுளம் நிலையத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் உயிா் மீட்பு பணிகளில் பயன்படும் சிறப்பு உபகரணங்களையும் பாா்வையிட்டாா். மேலும் தென் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநா் மற்றும் தென் மண்டல துணை இயக்குநா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT