மதுரை

மேலவளவு படுகொலை தினம்: பொதுக் கூட்டத்துக்குஅனுமதி கோரி உயா் நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்

25th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலவளவு படுகொலை தினத்தையொட்டி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள மேலவளவு ஊராட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த முருகேசன் உள்பட 6 போ், கடந்த 1997 ஜூன் 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா். அவா்களது நினைவாக, மேலவளவு கிராமத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 25-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதை காவல் துறை நிராகரித்துவிட்டது.

எனவே, பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதி வி. சிவஞானம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT