மதுரை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

24th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

மேலூா் வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள செந்தாம்பட்டியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (25). இவா், மதுரையிலுள்ள ஒரு தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT