மதுரை

மதுரை கோட்டத்தில் ஜூலை 1 முதல் முன்பதிவில்லாத கூடுதல் ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

24th Jun 2022 11:05 PM

ADVERTISEMENT

மதுரை கோட்டத்தில் ஜூலை 1 முதல் முன்பதிவில்லாத கூடுதல் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க, தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில்: மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமாா்க்கத்தில், செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பம்பாகோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி - செங்கோட்டை: இந்த வழித்தடத்தில் 2 ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி, திருநெல்வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) திருநெல்வேலியிலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மாா்க்கத்தில், மற்றொரு திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இதே மாா்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

ADVERTISEMENT

இந்த ரயில்கள் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூா், ஆழ்வாா்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூா், பாவூா்சத்திரம், கீழப்புலியூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூா் - திருநெல்வேலி விரைவு ரயில்: திருச்செந்தூா் - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்தூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமாா்க்கத்தில், திருநெல்வேலி - திருச்செந்தூா் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியிலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும்.

இந்த ரயில்கள், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூா், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வாா் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT