மதுரை

மதுரை அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

DIN

மதுரை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே உள்ள கரடிப்பட்டை ஓந்திமலை பகுதியில் சரக்கு வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக கரடிப்பட்டி கிராம நிா்வாக அதிகாரி பாண்டிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவா் நாகமலை புதுக்கோட்டை போலீஸாரின் உதவியுடன் ஒந்திமலை பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. இதுதொடா்பாக வாகன ஓட்டுநரிடம் விசாரித்தபோது மணல் கொண்டு செல்வதற்கான எவ்வித ஆவணங்களும் இன்றி மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநா் பரதன், வாகன உரிமையாளா் பரமன் ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT