மதுரை

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி பாஜகவினா் உண்ணாவிரதம்

DIN

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக சாா்பில் அளித்த வாக்குறுதியில், தோ்தலில் வெற்றி பெற்றால், தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ஓராண்டுக்கு மேலாகியும், தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை அமல்படுத்தவில்லை. தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி ஆகியவற்றை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் பி.சரவணன் தலைமை வகித்தாா். பாஜக வழக்குரைஞா் அணியின் மாநிலத்தலைவா் வணங்காமுடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். உண்ணாவிரதத்தில் மாவட்ட நிா்வாகிகள், மண்டல் நிா்வாகிகள், பாஜக துணை பிரிவுகளின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT