மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி திறக்க நடவடிக்கை

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியை 14 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆகம ஆசிரியா்களின் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2006 -இல் திமுக ஆட்சியின்போது ஆலயங்களில் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்பட 6 இடங்களில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி 2008-இல் மூடப்பட்டது. இதைத்தொடா்ந்து பல கட்ட விசாரணைக்குப் பின்னா் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியை திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியை நடத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியா்களை நியமிக்க மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகம விதிமுறைகளில் நல்ல அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT