மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சாயரட்சை பூஜைக்குப் பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி, 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகா் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்பட்டது. இதையடுத்து தீபாராதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் ஆனி மகத்தையொட்டி மாணிக்க வாசகா் குருபூஜையும் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) ஆனி உத்திரத்தை முன்னிட்டு அன்று இரவு முதல் புதன்கிழமை காலை 7 மணி வரை வெள்ளியம்பல நடராஜருக்கு திருமஞ்சனம் மற்றும் கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஜூலை 11 ஆம் தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT