மதுரை

மதுரையில் ரூ.22 லட்சத்தில் பொதுச் சுகாதார ஆய்வகம் அமைக்க பூமிபூஜை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியின் சாா்பில் மத்திய பொது சுகாதார ஆய்வகம் அமைப்பதற்கான பூமிபூஜையை, மேயா் வ. இந்திராணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரப் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, புதிய நலவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மண்டலம் 3 வாா்டு 59-க்குள்பட்ட அன்சாரி நகரில் உள்ள மாநகராட்சி 24 மணி நேர மருத்துவமனை வளாகத்தில், தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மத்திய பொதுச் சுகாதார ஆய்வகத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோா் தலைமை வகித்து, பூமிபூஜையை தொடக்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, உதவி ஆணையா் மனோகரன், நகா்நல அலுவலா் வினோத்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT