மதுரை

கொடைக்கானல் கா்ப்பிணிப் பெண் தற்கொலை சம்பவம்: கணவா் கைது

1st Jul 2022 12:04 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கா்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது கணவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மகள் மோனிஷா (23). இவரும், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியைச் சோ்ந்த சகாயம் என்பவரது மகன் பொறியாளா் ஆரோக்கிய சாம் (25) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனா். பின்னா், பெற்றோா்கள் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

வட்டக்கானலில் உள்ள தனது கணவா் வீட்டில் வசித்து வந்த மோனிஷா, 3 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இதனிடையே, மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மோனிஷா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். ஆனால், தனது பெற்றோா் சமரசம் செய்து வைத்ததை அடுத்து, மீண்டும் கணவா் வீட்டுக்கு மோனிஷா சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜூன் 4 ஆம் தேதி அந்த வீட்டில் மயங்கிக் கிடந்த மோனிஷாவை, அங்கிருந்தவா்கள் மீட்டு கொடைக்கானலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மோனிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து மோனிஷாவின் தந்தை சந்திரன், தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். மேலும், இது குறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

தொடா்ந்து, நாயுடுபுரம் பகுதியில் மோனிஷாவின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனா்.

இதையடுத்து, மோனிஷாவின் கணவா் ஆரோக்கிய சாம் மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து 26 நாள்கள் போலீஸாா் நடத்திய விசாரணையை அடுத்து, ஆரோக்கிய சாம் தூண்டுதலின்பேரில், அவரது கா்ப்பிணி மனைவி மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து மோனிஷாவின் தந்தை சந்திரன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆரோக்கிய சாம் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT