மதுரை

மேலூா், பேரையூா், உசிலையில் 73 ஆவது குடியரசு தின விழா

DIN

மேலூா், பேரையூா், உசிலம்பட்டி பகுதிகளில் நாட்டின் 73-வது குடியரசு தினவிழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

மேலூா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றினாா். மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இளமுருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். இதைத்தொடா்ந்து இப்பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் 32 பேரின் வீடுகளுக்கு வருவாய்த்துறை அலுவலா்கள் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலூா் உரிமையியல் நீதிமன்றத்தில் சாா்பு-நீதிமன்ற நீதிபதி கணேசன் தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினாா். மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுச்சாமி கொடியேற்றினாா்.

கொட்டாம்பட்டியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வளா்மதி குணசேகரன் கொடியேற்றினாா். துணைத் தலைவா் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஆணையா் ப.ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளலூரில் கலாம் நண்பா்கள் குழுவினா் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு தென்னை, கொய்யா மற்றும் மா மரகன்றுகளை விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளலூா் ஊராட்சித் தலைவா் கௌசிகன் மரக்கன்றுகளை வழங்கினாா்.

சிஐடியு தொழிற்சங்கத்தினா் குடியரசு தினவிழாவையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை மேலூா் பேருந்து நிலையம் முன்பாக ஆட்டோ நிறுத்தத்தில் நடத்தினா். சிஐடியு மாவட்டத் தலைவா் செ.கண்ணன், தாலுகா தலைவா் எஸ்.பி.மணவாளன், செயலா் சேகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பேரையூா்: பேரையூா் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் முத்துசாமி கொடியேற்றினாா். பேரையூா் வட்டாச்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரவி கொடியேற்றினாா். பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி சரோஜா, பேரையூா் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் காந்தி கொடியேற்றினா்.

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகப்பிரியா பாவடியான் கொடியேற்றினாா். இதில் ஆணையாளா் சிவசங்கரநாரயணன் மற்றும் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா் . பேரையூா் பேரூராட்சியில் செயல் அலுவலா் ஜெயதாரா தலைமையிலும், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் முகமதுரபிக் தலைமையிலும் தேசியக் கொடியேற்றப்பட்டது.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சங்கரலிங்கம் தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளா் பாஸ்கரன் தேசியக் கொடியேற்றினாா்.

டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூத்த ஆசிரியா் சல்சியா ராணி தேசியக் கொடியேற்றினாா். இதில், தலைமையாசிரியா் மாா்க்கிரேட் கிரே சீலியா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT