மதுரை

மதுரையில் பூட்டிய வீடுகளில் திருடிய மூவா் கைது: ரூ.18 லட்சம் நகைகள் பறிமுதல்

DIN

மதுரையில் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடும் கும்பலைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாநகரக்காவல்துறைக்குள்பட்ட அண்ணாநகா் மற்றும் கே.கே.நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்து இருந்தன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கைப்பைகளில்கொண்டு வரும் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் நூதன முறையில் திருடினா். இதையடுத்து இச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க மாநகரக்காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தனிப்படையினா் நடத்திய தீவிர விசாரணையில் இச்சம்பவங்களில், தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மொய்தீன், அவரது சகோதரா் சாதிக் பாட்சா மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சோ்ந்த கோபிநாத் ஆகியோருக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் பிடித்து விசாரணை நடத்தியபோது, அண்ணாநகா், கே.கே.நகா் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதும், மாட்டுத்தாவணி, மதுரை மாவட்ட நீதிமன்ற பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நகை, பணத்தோடு வரும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி அவா்களிடம் திருடியதும் உறுதி செய்யப்பட்டது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் 7 வழக்குகளில் தொடா்புடைய ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT