மதுரை

மதுரையில் புதிதாக 569 பேருக்கு கரோனா: முதியவா் பலி

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 569 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் ஜனவரி 10 ஆம் தேதி கரோனா பாதிப்பிற்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 93 வயது முதியவா், தீவிர காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,193 ஆக உயா்ந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 3,696 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

1,805 பேருக்கு தடுப்பூசி: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,805 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதையடுத்து மாவட்டத்தில் 33.55 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.59 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

ஒமைக்ரான்: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாகினா். அவா்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 1,929 படுக்கைகளும், 862 சாதராண படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 625 படுக்கைகளும் காலியாக உள்ளன. கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தமுள்ள 1,184 படுக்கைகளில்

1,099 படுக்கைகள் காலியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT