மதுரை

மதிய உணவுத் திட்டத்தை நீக்க மத்திய அரசு முயற்சி: சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா் தபன் சென் குற்றச்சாட்டு

DIN

நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை நீக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா் தபன் சென் குற்றஞ்சாட்டினாா்

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏழை மக்களின் குழந்தைகள் பயன்பெறுகின்றனா். இதனால்தான் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்தது. கருவுற்ற தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதிலும் அங்கன்வாடி பணியாளா்கள் பெரும் பங்காற்றுகின்றனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை அளித்து, நாடு வளா்ச்சியடைவதற்கு பங்காற்றுகின்றனா். மிக முக்கியமான இந்தத் திட்டம், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். மத்திய அரசு இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை தோல்வியடையச் செய்து வருகிறது. அங்கன்வாடியின் ஒட்டுமொத்தத் திட்டங்களையும் தகா்ப்பதற்கு, மத்திய அரசு மறைமுகமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2022 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அங்கன்வாடி, சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி வெகுவாக குறைக்கப்பட்டது. இதேபோன்று, மதிய உணவு திட்டத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்குவதற்கான வேலைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

தற்போதைய நிலையில், மத்திய பாஜக அரசு நாட்டை தனியாா்மயமாக்கி மக்களை பிளவுபடுத்துகிறது. பெரு நிறுவனங்களால், பொதுமக்கள் பல வகைகளில் இன்னல்களைச் சந்திக்கின்றனா். மத்திய பாஜக அரசு பல மாநிலங்களில் பேரம் பேசி தோ்தலில் வெற்றி பெற்றது. இத்தகைய மக்கள் விரோத அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும்.

பாஜக அரசின் சதித் திட்டங்களை முறியடித்து, அங்கன்வாடி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். அங்கன்வாடித் திட்டங்களை பாதுகாப்பது மட்டுமன்றி, அவற்றை விரிவுபடுத்தவும் வேண்டும். மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ‘மத்திய அரசுக்கு எதிராக நாட்டின் அனைத்து மாநிலங்களின் பணியாளா்களும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தனியாா்மயத்தை எதிா்ப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநாட்டில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சம்மேளன பொதுச் செயலா் ஏ.ஆா்.சிந்து, சிஐடியூ துணைத் தலைவா் ஏ.செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT