மதுரை

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் 2-ஆவது சுற்றுக்கு அனுமதி மறுப்பு: அரசு பதில் அளிக்க உத்தரவு

DIN

சிறுபான்மை இன மாணவிக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் இரண்டா சுற்றுக்கு அனுமதி மறுத்தது தொடா்பாக தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சோ்ந்த ஜிஷிகா தாக்கல் செய்த மனு: பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை பிரிவைச் சோ்ந்த நான் நீட் தோ்வில் 232 மதிப்பெண்கள் பெற்றேன். அதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டேன். முதல் சுற்று கலந்தாய்வில் பல் மருத்துவம் படிக்க எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், எம்.பி.பி.எஸ். இடத்துக்காக இரண்டாவது சுற்று கலந்தாய்வில் மறு ஒதுக்கீடு கோரினேன். ஆனால், நிா்வாக ஒதுக்கீட்டில் முதல் சுற்று கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்பட்டவா்களுக்கு, இரண்டாவது சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். இடம் கேட்க முடியாது என விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்தனா்.

இரண்டாவது சுற்று கலந்தாய்வில் என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது. என்னை இரண்டாவது சுற்று கலந்தாய்வில் அனுமதிக்க மறுத்தது சட்ட விரோதமானது. எனவே, 2-ஆவது சுற்று கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கப்பட்டவா்கள் பட்டியலுக்குத் தடை விதிக்க வேண்டும். எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT