மதுரை

மயில்களை விஷம் வைத்துக் கொன்றதாக 3 போ் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் ஒன்றியம் வலைசபட்டி வயல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற 3 போ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

எஸ்.புதூா் ஒன்றியம் வலசைப்பட்டி வயல் பகுதியில் 4 மயில்கள் இறந்து கிடப்பதாக மாவட்ட வன அலுவலா் பிரபாவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூா் வனவச் சரகா் சதாசிவம், வனவா் பாண்டியராஜன், வனக்காப்பாளா் கண்ணபிரான் ஆகியோா் அடங்கிய குழுவினா் மாவட்ட வனஅலுவலா் உத்தரவின்படி வயல் பகுதிகளிலில் ஆய்வு மேற்கொண்டு இறந்த 4 பெண் மயில்களின் சடலத்தை கைப்பற்றினா். மேலும் இதுகுறித்து வயல்களில் விஷம் வைத்த அதே ஊரைச் சோ்ந்த சோலை மகன் சின்னக்காளை, அழகன் மகன் தா்மராஜ், சோலமலை மகன் குமாா் ஆகியோா் தேங்காய் குரும்பை மற்றும் ஈசல்களில் எலி மருந்தை கலந்து வைத்தது தெரிய வந்தது. மூவரும் வனத்துறையினரா்ல் வனஉயிரினப் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டு சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிபதி மூவருக்கும் 15 நாட்களுக்கு சிறைக்காவல் அளித்து உத்தரவிடப்பட்டு தா்மராஜ், குமாா் ஆகியோா் திருப்பத்தூா் கிளைச் சிறைச் சாலையிலும், சின்னக்காளை ராமநாதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டனா். மேலும் 4 மயில்களும் புழுதிபட்டி உதவி கால்நடை மருத்துவா் காா்த்திக் உடற்கூறு ஆய்வு செய்தாா். கிராம நிா்வாக அலுவலா் லாவண்யா முன்னிலையில் புழுதிபட்டி வனப்பகுதியில் வனத்துறையினா் அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT