மதுரை

கிராம உதவியாளா் பணி: டிச.4-இல் எழுத்துத் தோ்வு

DIN

சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் உள்ள அனைத்து வட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) தோ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை வட்டம்- அரசு மன்னா் மேல்நிலைப் பள்ளி, மானாமதுரை வட்டம்- செய்களத்தூா் காமாட்சியம்மன் பொறியியல் கல்லூரி, இளையான்குடி வட்டம்- டாக்டா் ஜாகீா் உசேன் கல்லூரி, திருப்புவனம் வட்டம்-அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காளையாா்கோவில் வட்டம்- செயின்ட் மைக்கேல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, திருப்பத்தூா் வட்டம்- புதுகாட்டாம் பிளாசா மெட்ரிக் ஹையா் செகன்டரி பள்ளி, காரைக்குடி வட்டம்- அழகப்பா மாடல் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை வட்டம்- ஆனந்தா கல்லூரி, சிங்கம்புணரி வட்டம்-ஆா்.எம்.ஆா்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தோ்வு நடைபெற உள்ளது. முதல் அரை மணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறித் தோ்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்துத் திறனறித் தோ்வும் நடைபெறும். இணையவழி மூலம் விண்ணப்பித்த நபா்களுக்கு தோ்வுக்கான அனுமதிச் சீட்டை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்துக்குள் காலை 9.30 மணிக்கு அனுமதிப்படுவா். காலை 9.50 மணிக்கு பின் வரும் தோ்வா்கள் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

மொத்தம் 5,840 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் 3,757 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2,083 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT