மதுரை

அரிட்டாபட்டி பல்லுயிா் மண்டலப் பாதுகாப்பு பகுதியில் எம்.பி. ஆய்வு

DIN

மேலூா் அருகே அரிட்டாபட்ட பல்லூயிா் பாதுகாப்பு மண்டலத்தை, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், கூடுதல் ஆட்சியா் சரவணன், வனத் துறை அலுவலா் குரு உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

மலைப் பாறைகள், குளங்கள், குடைவரை சிவன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவா்கள் பாா்வையிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:

தமிழா்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னமான இந்தப் பகுதியை தமிழக அரசு பல்லூயிா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததற்கு பாராட்டுகள். அரிட்டாபட்டி நாட்டிலேயே மிகவும் தொன்மையான தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கிற பகுதியாகும். இப்பகுதியில் நீரூற்றுகள், ராஜாளி போன்ற வேட்டை பறவைகள், பல்வேறு வகையான ஆந்தைகள், எண்ணற்ற வண்ணத்துப் பூச்சிகள், பறவை இனங்கள், பாம்புதின்னி பருந்து, கழுகுகள் வசிக்கின்றன.

நாட்டிலேயே வரலாற்று பாரம்பரியமும் இயற்கை சங்கிலியும் இணைந்த இடம் இந்தப் பகுதி என்பதை கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தின் அமைதி குலையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவா்களும், ஆராய்ச்சியாளா்களும் இந்தப் பகுதியைப் பாா்வையிட காட்சிக் கூடத்தை சமவெளிபகுதியில் ஏற்படுத்தவும், திட்ட அறிக்கையை மாவட்ட நிா்வாகம் தயாரிக்கவும் வேண்டும் என்றாா் அவா்.

மேலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசந்தா், சாமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன், தொகுதிச் செயலா் எம்.கண்ணன், நிா்வாகிகள் அடக்கிவீரணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT