மதுரை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: ஆக.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

19th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

மதுரை அரசு ஆண்கள், மகளிா் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) நிா்வாகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ஆம் ஆண்டுக்கான சோ்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டின்படி மாநில அளவில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18 முதல் 25 ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. கட்டணமின்றி தங்கும் விடுதி வசதியும் உண்டு.தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.750 மற்றும் அனுமதிக்கப்படும் விலையில்லா பொருள்கள் வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 14 வயதுக்கு மேல்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாநில அளவிலான கலந்தாய்வுக்கு தரவரிசை உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.50 ஆகும். அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை (மகளிா்) பயிற்சி பெற விரும்புபவா்கள் தாங்கள் சேர விரும்பும் ஓராண்டு தொழிற்பிரிவுகள் அல்லது இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளைத் தோ்வு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது 82489-07516 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தை 88255-11818, 99760-10003 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையின்படி பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல எட்டாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பத்தாம் வகுப்பு சான்றிதழ் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT