மதுரை

பாத்திமா கல்லூரியில் 1,750 மாணவிகளுக்குப் பட்டம்

DIN

பாத்திமா கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 1,750 மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாத்திமா கல்லூரியின் 45-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெ.குமாா் மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது:

இன்றைய அறிவியல் முன்னேற்றம் சாா்ந்த புதிய ஆராய்ச்சிகளில் மாணவா்கள் ஈடுபட வேண்டும். வணிகம் மற்றும் நிா்வாகக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் சேர, சோழ, பாண்டியா்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்தனா். அதேபோல, குந்தவை நாச்சியாா், வணிகக் கட்டமைப்பிற்கு அடித்தளமிட்டவா். இதேபோல, நாட்டின் வளா்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்குவது அவசியமானது என்றாா்.

இவ்விழாவில், 1,307 பேருக்கு இளநிலை பட்டம், 333 பேருக்கு முதுநிலைப் பட்டம், 110 பேருக்கு தொழில்முறைக் கல்வி பட்டம், 3 பேருக்கு எம்பில் பட்டம் என மொத்தம் 1,750 மாணவியருக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரிச் செயலா் ம.பிரான்சிஸ்கா ஃபுளோரா, முதல்வா் ஜி.செலின்சகாய மேரி, துணை முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவியா், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT