மதுரை

மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று நிதி அமைச்சா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

 மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நிதி அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில், மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இரு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் ஏராளமானோா் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களது வீடுகளுக்கு

நேரில் சென்ற அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். காது கேட்கும் இயந்திரம், ஸ்மாா்ட் போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT