மதுரை

மதுரையில் பேருந்தில் பணம், நகை திருடிய 3 பெண்கள் கைது

13th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 மதுரையில் ஓடும் பேருந்தில் பணம் திருடிய 3 பெண்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி அருகே உள்ள சின்னசெட்டிபட்டியைச் சோ்ந்த முத்துமாரி மனைவி மாரியம்மாள் (32). இவா் காரியாப்பட்டியிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப்பேருந்தில் பயணம் செய்துள்ளாா். தெற்குவாசல் பகுதியில் பேருந்து வந்தபோது, அவா் வைத்திருந்த கைப்பையிலிருந்து பணத்தை திருட முயன்ற இரு பெண்களை சக பயணிகள் பிடித்து தெற்குவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் வெளிச்சநத்தத்தைத்ச சோ்ந்த மகரஜோதி மனைவி ஜோதி மணி(40) மேலூரைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி(47) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல பைக்காரா விவேகானந்தா் நகா் பகுதியை சோ்ந்த மேனகா(35) நகரப்பேருந்தில் பயணம் செய்தபோது அவரிடம் 6 கிராம் தங்க டாலா், ரூ. 4,500 திருடிய பெண்ணை பிடித்து சுப்ரமணியபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த பெண் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த பிரியா(24) என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT