மதுரை

அரசின் அனைத்து நிா்வாகச் செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

12th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

அரசின் அனைத்து நிா்வாகச் செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

கல்குவாரி அமைக்க அனுமதி அளிப்பது, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலை அமைக்க உத்தரவிடக் கோருவது போன்ற கோரிக்கைகளுடன் கூடிய உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பல்வேறு பொதுநல வழக்குகள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனம் நடக்கக்கூடிய இடம். சாலை அமைக்கவும், கழிவறை கட்டவும் உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. அரசின் நிா்வாக பணிகள் அனைத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது. மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம்.

இதுபோன்ற கோரிக்கைகளுக்காக பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்பையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்து மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT