மதுரை

தமிழக அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் வருவதாக புகாா்:மேல் நடவடிக்கைக்காக மத்திய அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைப்பு

11th Aug 2022 01:57 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் வருவதாக ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்ட புகாா் மேல் நடவடிக்கைக்காக மத்திய அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா் தமிழக ஆளுநருக்கு அனுப்பிய புகாரில், தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளுக்கு வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக பணம் அனுப்பப்படுவதாகவும், இந்த பணம் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படுவதாகவும், அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இந்த புகாா் தொடா்பாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு சாா்பில் முத்துக்குமாரிடம் ஜூலை 27-இல் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு ஆஜரான முத்துக்குமாா் புகாா் தொடா்பாக வழங்கிய ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

மேலும் இது அந்நியச் செலாவணி மற்றும் ரிசா்வ் வங்கி தொடா்புடையதாக இருப்பதால், முத்துக்குமாா் அளித்துள்ள புகாா் மற்றும் ஆதாரங்களை மத்திய அமலாக்கத்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக ஆளுநருக்கு அனுப்பிய புகாரின்பேரில் வழக்குரைஞா் முத்துக்குமாரிடம் இரண்டு கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முழு விவரங்கள் மற்றும் அவரிடம் பெற்றுள்ள ஆதாரங்கள் அனைத்தும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப்பிரிவு இயக்குநருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கைகாக மத்திய அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT