மதுரை

மதுரை மாவட்டத்தில் 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைப்பு

DIN

மதுரை மாவட்டத்தில் 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கரோனா பாதிக்கப்பட்ட 22 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனாவிற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 216 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 493 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதுவரை மாவட்டத்தில் 19.49 லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,320, அரசு மருத்துவமனைகளில் 1,390, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 82,120, சுகாதாரக் கிடங்கில் 1,19,550 என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT