மதுரை

ஜான்சிராணி பூங்கா முதல் முருகன் கோயில் வரை இன்று முதல் ஒருவழிப்பாதை அமல்: போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு

DIN

மதுரை நேதாஜி சாலை ஜான்சிராணி பூங்கா முதல் முருகன் கோயில் சந்திப்பு வரை திங்கள்கிழமை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை நகா் மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மீனாட்சியம்மன் கோயில், நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளுக்கும் செல்ல பயன்படுத்தக்கூடிய சந்திப்பாக மேலமாசிவீதி-நேதாஜி சாலை சந்திப்பு உள்ளது.

எப்போதும் அதிக வாகனப் போக்குவரத்து மற்றும் அதிக பாதசாரிகளின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெருக்கடி உடையதாக இச்சந்திப்பு அமைந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பில் பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலும் அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தீபாவளிப்பண்டிகை விழாக்காலம் என்பதால் மேலமாசி வீதி-நேதாஜி சாலை சந்திப்பில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தீபாவளிப்பண்டிகையொயொட்டி வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஜான்சிராணி பூங்கா முதல், முருகன் கோயில் வரை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை முதல் ஜான்சி ராணி பூங்கா சந்திப்பிலிருந்து முருகன் கோயில் வழியாக மேலமாசிவீதி மற்றும் திருப்பரங்குன்றம் சாலைக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கான்சாமேட்டுத்தெரு, டி.எம்.கோா்ட், மேலமாசிவீதி வழியாக மட்டுமே முருகன் கோயில் சந்திப்பு செல்ல இயலும்.

எனவே மேலக்கோபுரத் தெரு, மேல ஆவணி மூலவீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி சாலை முருகன் கோயில் செல்லாமல் கான்சாமேட்டுத்தெரு, டி.எம். கோா்ட், மேலமாசி வீதி வழியாக முருகன் கோயில் சந்திப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் வழக்கம்போல் நேதாஜி சாலை மற்றும் மேலமாசி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் முருகன் கோயில் வழியாக ஜான்சிராணி பூங்கா செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT