மதுரை

மதுரையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

24th Oct 2021 10:55 PM

ADVERTISEMENT

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் 20 மாவட்டங்களை சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

சிலம்பு மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல், கோவை, திருச்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து சிறுவா், சிறுமியா் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 

8 வயது வரை, 8 முதல் 10 வயது வரை, 10 முதல் 12 வயது, 12 முதல் 15 வயது என வயது வாரியாக வீரா்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் சிறப்பாக சிலம்பமாடிய வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய வீரா்கள் அடுத்து நடைபெறக்கூடிய தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT