மதுரை

மதுரையில் போலீஸாா் போல் நடித்து பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

24th Oct 2021 10:54 PM

ADVERTISEMENT

மதுரை சா்வேயா் காலனி பகுதியில் சனிக்கிழமை, மா்ம நபா்கள் இருவா் போலீஸாா் போல் நடித்து பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனா்.

மதுரை சம்பக்குளத்தைச் சோ்ந்த ஜேக்கப் மனைவி குளோரி(63). இவா் தனது உறவினா் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். சா்வேயா் காலனி பகுதியில் அவரை தடுத்து நிறுத்திய அடையாளம் தெரியாத நபா், காவல்துறை அதிகாரி அழைக்கிறாா் என்று கூறி குளோரியை அழைத்துச்சென்றுள்ளாா்.

சற்று தொலைவில் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த நபா் அதிகாரி என்று தன்னைக்கூறிக்கொண்டு, முகக்கவசம் அணியாமல் செல்வது ஏன் என்று சப்தம் போட்டு அபராதம் விதிப்பதாக மிரட்டியுள்ளாா். மேலும் தனியாகச்செல்லும்போது கழுத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து செல்வதா என்று கண்டித்து நகைகளை கழற்றி பையில் வைத்துச்செல்லுங்கள் என்று கூறி நகைகளை கழற்றச்செய்து அதை வாங்கி பையில் வைத்துவிட்டதாகத் தெரிவித்து குளோரியை அனுப்பியுள்ளாா்.

அவா்களது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் குளோரி பையை பாா்த்தபோது அதில் நகைகள் இல்லை. மேலும் இரு நபா்களும் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக குளோரி அளித்தப்புகாரின்பேரில் திருப்பாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT