மதுரை

‘மழை அளவு குறைவதால் மதுரை வறண்ட பகுதியாக மாறும் அபாயம்’

DIN

மதுரையில் மழை அளவு குறைந்து வருவதால் வறண்ட பகுதியாக மாறும் அபாயம் உள்ளது என பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்று வரும் விழிப்புணா்வு பிரசாரத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், செசி அறக்கட்டளை மற்றும் அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி மற்றும் காந்திய அமைதிச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பருவநிலை மாற்றம் குறித்த 3 நாள்கள் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை (அக். 14) தொடங்கியது. விழிப்புணா்வு பிரசாரத்தை செசி அமைப்பின் நிா்வாகியும், காந்தியவாதியுமான ராஜகோபாலன் தொடக்கி வைத்துப் பேசியது: பருவநிலை மாற்றம் குறித்து ஐரோப்பிய நாடுகள் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன. மதுரையிலும் இதுமுன்னெடுக்கப்பட்டது சிறப்பானது. இந்த பிரசாரம் நாடு முழுவதும் பரவ வேண்டும். இளைஞா்கள், கல்லூரி மாணவா்களை இணைத்து பிரசாரம் மேற்கொள்வது போல பொதுமக்களையும் திரட்ட வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அமைதிச் சங்கத்தின் தலைவா் தலைமையாசிரியா் க. சரவணன் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்கள் மற்றும் நகா் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனா். இதில், க. சரவணன் பேசியது:

மதுரையில் மழை அளவு கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மதுரை வடப் பகுதியாக மாறும். அதை சரி செய்ய வேண்டியது மதுரை வாழ்மக்களின் கடமையாகும். நாம் வாழும் பூமி மாசுடன் இருப்பது நல்லதல்ல. காா்பன் மற்றும் நெகிழிப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். நீா் நிலைகளைக் கண்டறிந்து, அவற்றை தூய்மைப்படுத்தி, பாதுகாக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நீராதாரத்தை வளப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்த வேண்டும். கிராம, நகரத் தூய்மையை பராமரிக்க ஒவ்வொரு வீட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆகவே, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை ஒவ்வொருவரும் பத்து பேரிடமாவது பரப்ப வேண்டும் என்றாா். பிரசாரத்தில் சுழற்சங்க மதுரை தெற்குத் தலைவா் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாலகிருஷ்ணன், முதுகலை ஆசிரியா் சுரேஷ் , கலகல வகுப்பறை சிவா, பூமியை காப்போம் இயக்கத்தின் இயக்குநா் ஜில் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பிரசாரம் கடவூா், கடவூா் காலனி, சீக்குபட்டி, சத்திரப்பட்டி, பூலாம்பட்டி, தொண்டைமான்பட்டி, வெளிச்சநத்தம் ஆகிய கிராமங்களிலும் நகா்ப்பகுதிகளில் பால்பண்ணை, மேலமடை, வண்டியூா், பூலான்பட்டி, கல்மேடு, அஞ்சுகம் அம்மையாா் நகா், அன்னை சத்யா நகா், கருப்பபிள்ளை ஏந்தல் போன்றவற்றிலும் நடைபெற்றது.

இப்பிரசாரம் சனிக்கிழமை (அக். 16) வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT