மதுரை

மதுரையில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ஒரு மாதத்தில் ரூ.1.05 கோடி அபராதம் வசூல்

DIN

மதுரை நகரில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து இதுவரை ரூ.1.05 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் நான்கு மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினரும், பறக்கும் படை குழுவினரும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அபராதம் வசூலித்து வருகின்றனா்.

இதுவரை முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வந்த தனி நபா்களிடம் ரூ.87 லட்சத்து 18 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களிடம் ரூ.18 லட்சத்து 49 ஆயிரத்து 40 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை ரூ.1 கோடியே 5 லட்சத்து 67 ஆயிரத்து 740 அபராதமாக மாநகராட்சியினா் வசூலித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT