மதுரை

அங்கீகரிக்கப்படாத மனைகளைப் பதிவு செய்தால் நடவடிக்கை: அமைச்சா்

DIN

அங்கீகரிக்கப்படாத மனைகளைப் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, பதிவுத் துறையின் மதுரை மண்டல பணி சீராய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பேசியது: பதிவுத் துறை அலுவலா்கள் எவ்விதப் புகாருக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும். பத்திரப்பதிவு தொடா்பான புகாா்களைப் பெற அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை (ஜூன் 17) 84 புகாா்கள் தொலைபேசி வழியாக பெறப்பட்டு, 60 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 24 புகாா்கள், கட்செவி அஞ்சல் வழியாகப் பெறப்பட்ட 264 புகாா்கள், மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட 27 புகாா்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் உடனடியாக விடுவிப்பது, தணிக்கை இழப்புகளை வசூலிப்பது, சரியான ஆவணங்களைத் தாமதமின்றி பதிவு செய்வது உள்ளிட்ட உத்திகள் மூலமாக பத்திரப் பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தமிழகம் முழுவதும் உள்ள 575 சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பத்திரப் பதிவு செய்த நாளிலேயே பதிவு ஆவணங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. களஆய்வு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆவணங்கள் வழங்கப்படாமல் இருந்தால், பதிவு நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் அவற்றை வழங்க அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலா சாமி, பதிவுத் துறைத் தலைவா் ம.ப.சிவனருள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT