மதுரை

மதுரையில் 3 வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு

DIN

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கதவை உடைத்து 32 பவுன் நகைகள் மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மதுரை தெப்பக்குளம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் செல்வபாண்டி (42). இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து செல்லவபாண்டி அளித்தப் புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை தத்தனேரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சிலம்பன் மகன் சிவானந்தம் (65). இவா் ஜனவரி 14 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மேலூா் பிரதான சாலை, லேக் ஏரியா 2 ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் ஜவஹா் ரவீந்திரன் (55). இவா் வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் தோடு, மடிக்கணினி ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து ஜவஹா் ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் கே.புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT