மதுரை

மதுரையில் 686 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டத்தில் 3 நாள்களில் 686 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 5 மையங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது நாளான திங்கள்கிழமை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் 164 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 39 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 58 போ், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 போ், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 54 போ் என மொத்தம் 318 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 3 நாள்களில் மொத்தம் 686 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் 15 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 19 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 20,830 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 20,260 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 115 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT