மதுரை

பாபா் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

5th Dec 2021 10:22 PM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்புத் தினத்தையொட்டி மதுரை நகரில் மற்றும் ஊரகப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாபா் மசூதி இடிப்பு தினமான டிசம்பா் 6-ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், பள்ளிவாசல்கள், மதுரையில் உள்ள முக்கிய கோயில்கள், விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். மதுரை மாநகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனா் கருவி மூலம் பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையத்தில் அனைத்துப் பயணிகளிடமும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர சோதனை நடத்திய பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனா். நடை மேடைகளில் மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT