மதுரை

முதுகுளத்தூா் உள்பட 3 தாலுகாக்களுக்கு வைகை நீா் கோரி மனு: பெரியாறு-வைகை நீா் பங்கீட்டு விதிகளை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி தாலுகாக்களுக்கு வைகை ஆற்று நீரை கொண்டு வர நடவடிக்கை கோரிய மனுவில், பெரியாறு- வைகை நீா் பங்கீட்டு விதிகளை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பிரபு தாக்கல் செய்த மனு: மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூா், கமுதி, கடலாடி தாலுகாக்களில் உள்ள 160 கிராமங்கள் முழுமையாக விவசாயத்தை நம்பி உள்ளன. ஆனால் போதிய தண்ணீா் வசதியில்லாததால், விவசாயம் முறையாக நடைபெறுவதில்லை.

இதனால், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்கள் ஆகியோா், வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடம்பெயா்ந்து வருகின்றனா். எனவே, 3 தாலுகாக்களில் உள்ள 160 கிராமங்களிலும் தடையின்றி விவசாயம் நடைபெற, வைகை ஆற்று நீரை கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரியாறு- வைகை நீா் பங்கீட்டு விதிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT