மதுரை

மதுரையில் புதிதாக 26 பேருக்கு கரோனா

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 34 போ் குணமடைந்துள்ளனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை 73 ஆயிரத்து 615 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இவா்களில் 72 ஆயிரத்து 223 போ் குணமடைந்துள்ளனா். 1,146 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோா் என 246 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிப்பு கிராமப் பகுதிகளில் குறைந்துள்ளதையடுத்து, மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பணிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ஆனையூா் (வாா்டு 3), கோச்சடை (வாா்டு 22), தாசில்தாா் நகா் (வாா்டு 29), விளாங்குடி (வாா்டு 23) ஆகிய பகுதிகளில் சில தெருக்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT