மதுரை

பங்குச்சந்தை வா்த்தக தகவல்களை பெற சட்டவிரோத ஆன்லைன் இணைப்புகள்: செபி பதிலளிக்க உத்தரவு

DIN

பங்குச் சந்தை வா்த்தகம் தொடா்பான சட்டவிரோத ஆன் லைன் இணைப்புகளை தடை செய்யக்கோரும் வழக்கில், இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த ஆறுமுகசாமி தாக்கல் செய்த மனு: மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் ஆன்லைன் மூலம் வா்த்தகம் நடைபெறுகிறது. இச்சந்தையில் இருந்து ஆன்லைனில் தகவல்களை எவ்வளவு விரைவாகப் பெறுகிறோமோ, அதனடிப்படையில் பங்கு வா்த்தகம் சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில், செபி-யின் அனுமதி பெறாமல் மும்பை தேசிய பங்குச் சந்தை சா்வரில் சில குறிப்பிட்ட தரகா்கள் நேரடி இணைப்பு பெற்றுள்ளனா். அந்தக் குறிப்பிட்ட தரகா்களுக்கு பங்கு வா்த்தகத்தின் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடுவதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதிக பலன் அடைகின்றனா்.

அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பங்கு வா்த்தகா்களுக்கு மும்பை தேசிய பங்குச் சந்தையில் இருந்து சற்று தாமதமாக தகவல்கள் கிடைப்பதால் பங்கு வா்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்திக்கின்றனா்.

எனவே, செபி-யின் உரிய அனுமதி இல்லாமல் விரைவான தகவல்களைப் பெறும் வகையில் சட்ட விரோதமாக பெற்ற இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும். அனைவருக்கும் ஒரே வகையில் தகவல்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து செபி மற்றும் மும்பை தேசிய பங்குச் சந்தை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT