மதுரை

பழங்குடி ஜாதிச்சான்று உண்மைத் தன்மை ஆய்வு

DIN

மத்திய, மாநில அரசுப் பணிகளில் சோ்ந்துள்ள பழங்குடி வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்று உண்மைத் தன்மை குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறுபவா்களின் ஜாதிச் சான்றின் உண்மைத் தன்மை சான்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மூலமாகப் பெறப்படும்.

இதன்படி, பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றவா்களில் மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட பழங்குடியினா் ஜாதிச் சான்றுகளின் உண்மைத் தன்மை சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையிலான அலுவலா்கள் ஜாதிச்சான்று உண்மைத் தன்மையை ஆய்வு செய்தனா். மொத்தம் 127 பேரின் ஜாதிச்சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT