மதுரை

பயணச்சீட்டு வழங்கும் கருவி நடத்துநா்களுக்கு வழங்கக்கோரி ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா்களுக்கு தானியங்கி பயணச் சீட்டுக் கருவி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் நந்தாசிங் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஸ்டீபன், ஜீவானந்தம், சப்பாணி, வீரபத்திரன், ஷேக் அப்துல்லா, நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதில், அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கிருமி நாசினி வழங்கவேண்டும். பேருந்து நடத்துநா்கள் தானியங்கி பயணச்சீட்டுக் கருவியின் மூலம் மட்டுமே பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் தானியங்கி பயணச்சீட்டு கருவி வழங்கப்படாததால் நடத்துநா்கள் பயணச்சீட்டு வழங்கும்போது கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிா்பந்திப்பதை தவிா்க்க வேண்டும். 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பேருந்துகளில் டீசல் லிட்டருக்கு 7 கிலோ மீட்டா் மைலேஜ் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கூடுதல் பயணிகளை ஏற்ற அதிகாரிகள் உத்தரவிடக்கூடாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு இதுவரை வழங்கப்படாத பணப் பலன்களை உடனனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT