மதுரை

சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளில் தொய்வு: தேங்கும் மழை நீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்கள் அவதி

DIN

மதுரையில் சீா்மிகு நகா்த் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதையடுத்து பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் பெரியாா் பேருந்து நிலையம் சீரமைப்பு, நான்கு மாசி வீதிகளில் மழை நீா் கால்வாய், நடைமேடை, பன்னடுக்கு வாகன காப்பகம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பெரியாா் பேருந்து நிலையம், நான்கு மாசி வீதிகள் உள்பட பல பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த பணிகளில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது ஏராளமானோா் தங்களது மாநிலங்களுக்கு சென்று விட்டனா். இதனால் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாத நிலையில் தற்போது மதுரையில் தொடா் மழை பெய்து வரும் நிலையில் பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

அதோடு, நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் குண்டும் குழியாக உள்ளன. தெருக்கள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இவற்றை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்கி அதில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரியாா் பேருந்து நிலையம், நான்கு மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் முடிவடையாமல் இருப்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனா். பலா் உடல் வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். கொசுக்கடியால் மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் முன்பாக மாநகராட்சி நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: மதுரை நகரில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிப்பதற்காக 500 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சி நடத்தும் காய்ச்சல் முகாம்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும் கேட்டறியப்படுகிறது. கொசு உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கொசுப்புகை மருந்து தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT