மதுரை

உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்.5 முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள்

DIN

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்டோபா் 5 ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்கவுள்ள நீதிபதிகளின் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, அக்டோபா் 5 ஆம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கவுள்ள நீதிபதிகளின் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய முதல் அமா்வு பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமா்வு ஆள்கொணா்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கல்வி, நிலச் சீா்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்குகளையும், நீதிபதி ஆா்.மகாதேவன், 2015-ல் இருந்து நிலுவையில் உள்ள 2 ஆவது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2014 வரையுள்ள உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி எம்.கோவிந்தராஜ், 2014 வரையிலான முதல் மற்றும் 2 ஆவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனா்.

நீதிபதி ஜெ.நிஷாபானு, 2018 முதல் நிலுவையில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482, 407 பிரிவின் கீழ் தாக்கலான குற்றவியல் மனுக்கள், ரிட் மனுக்களையும், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 2015 வரையுள்ள தொழிலாளா் மற்றும் பணித் தொடா்பான ரிட் மனுக்களையும், நீதிபதி என்.சேஷசாயி, 2015 முதல் தாக்கலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிக்கின்றனா்.

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், 2017 வரையுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடு வழக்குகள், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு வழக்குகளையும், நீதிபதி அப்துல்குத்தூஸ், மோட்டாா் வாகனம், வரி, ஏற்றுமதி, இறக்குமதி, கனிமம், வனம் தொடா்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆா்.தாரணி 2018 முதல் தாக்கலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடு வழக்குகளையும் விசாரிக்கின்றனா்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி, 2016 முதலான தொழிலாளா், பணி தொடா்பான ரிட் மனுக்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் தொடா்பான மனுக்களையும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT