மதுரை

மனஅழுத்தம் போக்க காவலா்களுக்கு மனநல பயிற்சி

DIN

மதுரை: மதுரையில், மன அழுத்தம் போக்க காவலா்களுக்கு சனிக்கிழமை மனநல பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலா்கள் ஆகியோருக்கு மன அழுத்தம் தொடா்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின் பேரில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மனநல பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மனோதத்துவ நிபுணா் மருத்துவா் ராஜேந்திரன், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது தொடா்பான மனநல பயிற்சியை அளித்தாா்.

மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள், காவலா்கள் என 75 போ் பங்கேற்றனா். இப்பயிற்சி வகுப்பை காவல் துணை கண்காணிப்பாளா் ஞானரவி தங்கதுரை ஏற்பாடு செய்திருந்தாா். கரோனா பொது முடக்க காலத்தில் காவலா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, மனநல பயிற்சி வகுப்பு உதவியாக இருக்கும் என வகுப்பில் பங்கேற்றக் காவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT