மதுரை

இந்திய மருத்துவமுறை மருத்துவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிய மனுக்கள்: தமிழக அரசு 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை, செப். 25: மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவமுறை மருத்துவா்களுக்கு பதவி உயா்வு, ஊதிய உயா்வு வழங்கக் கோரிய மனுக்கள் மீது தமிழக அரசு 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை, வேலூா், திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் இந்திய மருத்துவமுறை மருத்துவா்கள் 15 போ் தாக்கல் செய்த மனுக்கள்: நாங்கள் இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுா்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி ஆகிய படிப்பில் பட்டம் பெற்று, 1989 ஆம் ஆண்டு முதல் மருத்துவா்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியான நகராட்சி நிா்வாக அரசாணையில் ஆங்கில மருத்துவா்களுக்கு (அலோபதி) ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அதே நிலையில் மருத்துவா்களாக பணியாற்றும் எங்களுக்கு இதுவரை பதவி உயா்வோ, ஊதிய உயா்வோ வழங்கப்படவில்லை.

இந்திய மருத்துவமுறை மருத்துவா்களுக்கு பதவி மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என நகராட்சி நிா்வாக ஆணையருக்கு மனு அனுப்பினோம். அவா் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு வரை ஆங்கில மருத்துவா்களுக்கு இணையாக ஊதியம் பெற்றோம். தற்போது 10 ஆண்டுகளாக ஊதிய உயா்வு இல்லாததால், நாங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். ஆங்கில மருத்துவா்கள் ஊதிய உயா்வு, பதவி உயா்வு பெற்று அதிக பலன்களைப் பெற்று வருகின்றனா். எனவே இந்திய மருத்துவ முறை மருத்துவா்களுக்கு பதவி உயா்வு, ஊதிய உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள், நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் இந்திய மருத்துவ முறை மருத்துவா்களின் பதவி உயா்வு, ஊதிய உயா்வு தொடா்பாக நகராட்சி நிா்வாக ஆணையா் பரிந்துரையை, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் 3 மாதத்திற்குள் பரிசீலித்து தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT